Friday 1 July 2016

3. தண்டனைகள் (அத்யாயம்(CHAPTER) - 3)

இ.த.சட்டத்தின் படி குற்றவாளிகளுக்கு அளிக்கபட அனுமதிக்கப்பட்டுள்ள தண்டனைகள்:

1. மரணம்.
2. ஆயுள் சிறை
3. (1949 ல் நீக்கப்பட்டுவிட்டது)
4. இருவகையுள்ளது. 1. கடுங்காவல் (கடுமையான உழைப்புடன்). 2. மெய்காவல்.
5. சொத்தின் தண்ட இழப்பு
6. அபராதம்.

மரண தண்டனை / ஆயுள் தண்டனைகளில் அரசுகள் மாற்றம் செய்ய இயலுமா?    ஆம். இயலும்.

இந்திய தண்டனை சட்ட பிரிவு 54 ன் கீழ் "மரண தண்டனை" விதிக்கப்பட்ட குற்றவாளிகளுக்கு அவர்களின் அனுமதியில்லாமல் இச்சட்டத்தால் வகை செய்யப்பட்டுள்ள வெறெந்த தண்டனையாகவும் மாற்ற "மத்திய அரசு"க்கு அனுமதியுள்ளது.


இந்திய தண்டனை சட்ட பிரிவு 55 ன் கீழ் "ஆயுள் தண்டனை" விதிக்கப்பட்ட குற்றவாளிகளுக்கு அவர்களின் அனுமதியில்லாமல்14 ஆண்டுகள் மேற்படாத வெறெந்த தண்டனையாகவும்  மாற்ற "மாநில‌அரசு"க்கு அனுமதியுள்ளது.

No comments:

Post a Comment