Sunday 3 July 2016

சற்று கவனிக்கப்பட வேண்டிய இந்திய தண்டனை சட்ட பிரிவு 80

இந்திய தண்டனை சட்ட பிரிவு 80 - சட்டப்பூர்வமான ஒரு செய்கையை செய்கையில் ஏற்படும் தற்செயல் நிகழ்ச்சி குற்றமல்ல.

அதாவது, ஒருவர், கைக்கோடாரியுடன் வேலை செய்கின்றார், திடீரென கோடாரியின் தலைப்பாகம் கழன்று போய் அருகில் நின்று கொண்டிருந்தவரை கொன்று விட்டது என்றால் அது மன்னிக்க முடியாத குற்ற செயல் அல்ல.

ஆனால், இதில் மிக முக்கியமாக நாம் கவனிக்க வேண்டிய ஒரு உட்கருத்து உள்ளது, அது என்னவென்றால்,  இந்த செயல் நிகழ்வதற்கு முன் அது குறித்து எந்த ஒரு எச்சரிக்கையும் அவருக்கு யாராலும் அளிக்கப்படாமலிருக்க வேண்டும். ஒருவேளை அவ்வாறு எச்சரித்த பின்னும், அவர் கோடாரியினை சரி செய்யாமல் வேலை செய்து இந்த மரணம் நிகழ்ந்தால் அது குற்றமாகும்.

இதில் வழக்குறைப்பவரின் வாத திறமை மற்றும் சாட்சிகளை விசாரித்தல் மற்றும் சாட்சியங்களை சேகரித்தல் மூலமே நியாயமும், அநியாயமும் கிடைக்கும்.


4 comments:

  1. எச்சரிக்கை செய்யப்பட்தா இல்லையா என்பதிலே வழக்கு நின்றுவிடும் போல....

    ReplyDelete
    Replies
    1. அவ்வாறல்ல.. எச்சரிக்கை செய்யப்பட்டதாக சாட்சிகளை உருவாக்கினால் குற்றவாளியாகிவிடுவார்... அவ்வாறு எச்சரிக்கை செய்யப்படவில்லை என்று நிருப்பித்துவிட்டால் குற்றமற்றவராகிவிடுவார். இதுதான் சட்ட சூழ்சுமம்.

      Delete