Sunday 3 July 2016

உங்கள் புகார் பதிவு செய்ய மறுக்கப்பட்டால்

காவல் நிலையத்தில் அளித்தாலும், மாவட்ட கண்காணிப்பாளருக்கு அளித்தாலும், புகாரானது பதிவு செய்யப்படாவிட்டால் குற்றவியல் நடைமுறைச் சட்டப்பிரிவு 156(3) ன் கீழ் அக்குற்றச்சாட்டு நடைபெற்ற எல்லையில் உள்ள நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கலாம். அப்புகாரில் உண்மை இருப்பதாக நீதித்துறை நடுவர் திருப்தி அடைந்தால், அவ்வழக்கை முதல் தகவலறிக்கை பதிவு செய்து விசாரிக்குமாறு சம்மந்தப்பட்ட காவல் துறையினருக்கு உத்தரவிடலாம். அவ்வாறு உத்தரவிடப்பட்டால் காவல் துறையினர்  வழக்கை பதிவு செய்து விசாரிப்பதை தவிர வேறு வழியில்லை.  மேலும் வழக்கை பதிவுசெய்து விசாரிக்க ஆணையிட்ட நடுவர்நீதிமன்றம் வழக்கின் விசாரணையையும் மேற்பார்வையிடலாம்.

இதை தவிர, குற்றவியல் நடைமுறைச் சட்டப்பிரிவு 2(4) ன் கீழ் முறையீடாகவும், சட்டப்பிரிவு 2(7) ன் கீழ் பரிசீலனை மனுவாகவோ, சட்டப்பிரிவு 190 (1-அ) கீழ் விசாரிக்கச்சொல்லியோ, சட்டப்பிரிவு 200 ன் கீழ் புகார் மனுவாகவோ குற்றவியல் நீதிமன்ற நடுவரிடம் அளிக்கலாம்

1 comment: