Friday 15 July 2016

பொய் சாட்சியம்.


பொய் சாட்சியம்.
பொய் என்று தெரிந்தே அது குறித்து சாட்சியாக இருப்பதும், பொய் சாட்சியங்களுக்கான ஆவனங்களை தயாரிப்பதும், இந்திய தண்டனை சட்ட பிரிவு 191 & 192 ன் கீழ் தண்டனைக்குரிய குற்றமாகும்.

"அ" என்பவரின் கையெப்பம்தான் இது என "ஆ" என்பவர் அறிந்த நிலையில் பொய் சொல்வது பொய் சாட்சியாகும்.

"அ" என்பவரின் கையெப்பம் பற்றி அறிந்த "ஆ" என்பவர் ஒரு குறிப்பிட்ட கையெப்பத்தினை "அ" வின் கையெப்பம் என தான் நம்புவதாக சொல்வது "ஆ" வின் நம்பிக்கை பொறுத்த மட்டில் உண்மை என்பதால், ஒரு வேளை அது "அ" வின் கையெப்பமாக இல்லாமல் போனாலும் "ஆ" சொல்லியது பொய் சாட்சியமாக ஆகாது.

பொய் சாட்சியத்திற்கான தண்டனை
இந்திய தண்டனை சட்ட பிரிவு 193 ன் கீழ்,  நீதி மன்ற நடவடிக்கையின் எந்த ஒரு கட்டத்திலும் உட்கருத்துடன் பொய் சாட்சியம் தருகின்ற / பொய் சாட்சியம் புனைகின்ற ஒருவருக்கு 7 ஆண்டுகள் வரை சிறை மற்றும் அபராதம்.

மற்ற சந்தர்ப்பங்களில்,  உட்கருத்துடன் பொய் சாட்சியம் தருகின்ற / பொய் சாட்சியம் புனைகின்ற ஒருவருக்கு 3 ஆண்டுகள் வரை சிறை மற்றும் அபராதம்.

No comments:

Post a Comment