Wednesday 27 July 2016

சாட்சியத்தினை மறைத்தல் (அ) குற்றவாளியினை காப்பாற்ற பொய்த்தகவல் அளித்தல்

பொய் என்று தெரிந்தே சாட்சியினை பயன் படுத்துதல் இந்திய தண்டனை சட்டம் 196 ன் கீழ் குற்றம்.
பொய் சான்றிதழ் அளித்தல் (அ) அதற்கு கையெப்பமிடுதல் இந்திய தண்டனை சட்டம் 197 ன் கீழ் குற்றம்.

குற்றத்திற்கான சாட்சியத்தினை மறைத்தல் (அ) குற்றவாளியினை காப்பாற்ற பொய்த்தகவல் அளித்தல் இந்திய தண்டனை சட்டம் 201 ன் கீழ் குற்றம். இவ்வாறான செயல்கள், மரண தண்டனைகளுக்குரிய குற்றமாக இருக்கும் பட்சத்தில், 7 ஆண்டுகள் வரையிலான சிறை & அபராதம். ஆயுள்தண்டனைகளுக்குரிய / 10 ஆண்டுகள் தண்டிக்கத்தக்க குற்றமாக இருக்கும் பட்சத்தில், 3 ஆண்டுகள் வரையிலான சிறை & அபராதம். 10 ஆண்டுக்களுக்கு கீழான சிறை தண்டனைக்குரிய குற்ற செயல்களாக இருக்கும் பட்சத்தில், எவ்வளவு அதிக கால அளவிற்கு சிறை தண்டணை அளிக்க முடியுமோ அதில் 1/4 கால அளவில் சிறை & அபராதம்.


Friday 15 July 2016

பொய் சாட்சியம்.


பொய் சாட்சியம்.
பொய் என்று தெரிந்தே அது குறித்து சாட்சியாக இருப்பதும், பொய் சாட்சியங்களுக்கான ஆவனங்களை தயாரிப்பதும், இந்திய தண்டனை சட்ட பிரிவு 191 & 192 ன் கீழ் தண்டனைக்குரிய குற்றமாகும்.

"அ" என்பவரின் கையெப்பம்தான் இது என "ஆ" என்பவர் அறிந்த நிலையில் பொய் சொல்வது பொய் சாட்சியாகும்.

"அ" என்பவரின் கையெப்பம் பற்றி அறிந்த "ஆ" என்பவர் ஒரு குறிப்பிட்ட கையெப்பத்தினை "அ" வின் கையெப்பம் என தான் நம்புவதாக சொல்வது "ஆ" வின் நம்பிக்கை பொறுத்த மட்டில் உண்மை என்பதால், ஒரு வேளை அது "அ" வின் கையெப்பமாக இல்லாமல் போனாலும் "ஆ" சொல்லியது பொய் சாட்சியமாக ஆகாது.

பொய் சாட்சியத்திற்கான தண்டனை
இந்திய தண்டனை சட்ட பிரிவு 193 ன் கீழ்,  நீதி மன்ற நடவடிக்கையின் எந்த ஒரு கட்டத்திலும் உட்கருத்துடன் பொய் சாட்சியம் தருகின்ற / பொய் சாட்சியம் புனைகின்ற ஒருவருக்கு 7 ஆண்டுகள் வரை சிறை மற்றும் அபராதம்.

மற்ற சந்தர்ப்பங்களில்,  உட்கருத்துடன் பொய் சாட்சியம் தருகின்ற / பொய் சாட்சியம் புனைகின்ற ஒருவருக்கு 3 ஆண்டுகள் வரை சிறை மற்றும் அபராதம்.

Wednesday 13 July 2016

அரசு (பொது) ஊழியர்களால் செய்யப்படும் / சம்மந்தப்பட்ட குற்றங்கள்.

இந்திய தண்டனை சட்ட பிரிவு 166
ஒரு அரசு ஊழியர், சட்டப்படி தான் செய்ய வேண்டிய கடமையினை செய்யாமலிருப்பது ஓர் ஆண்டு வரை சிறைதண்டனைக்குரிய குற்றமாகும்.

இந்திய தண்டனை சட்ட பிரிவு 167

ஒரு பொது ஊழியர் கேடு விளைவிக்கும் நோக்கத்துடன் தவறான ஒரு ஆவணத்தையோ / மொழி பெயர்ப்பையோ உருவாக்குவது 3 ஆண்டுகள் வரை சிறைதண்டனைக்குரிய குற்றமாகும்.

நேரடியாக பெறுதல் மட்டுமே லஞ்சம் அல்ல...

"அ" என்ற வங்கியருக்கு சாதகமாக வழக்கை முடிவு செய்வதற்காக "ஆ" என்ற நீதிபதி தனது சகோதருக்கு ஓர் வேலையினை "இ" என்பவரிடமிருந்து கேட்டு பெறுகின்றார் என்றால் இதுவும் லஞ்சமே.

Monday 11 July 2016

உடந்தையாயிருத்தல் பற்றி..

இந்திய தண்டனை சட்டம் பிரிவு 107

1. ஒரு செயலை செய்ய தூண்டுதல்.
2. ஒரு செயலை செய்ய ஒருவரோ/ ஒன்றுக்கும் மேற்பட்டவர்களாலோ சதி திட்டம் தீட்டப்படுதல்.
3. செய்யப்பட வேண்டிய செயலை செய்யாமல் சட்ட விரோதமாக‌ விடுவிப்பு செய்தல்.
இவை அனைத்தும் அந்த செயலிற்கு உடந்தையாக இருந்துள்ளார் என பொருள் கொள்ளப்படும்.
இவை மட்டுமல்ல.. வேண்டுமென்றே தவறாக திரித்து கூறுவதன் மூலம் தாம் வெளிபடுத்த வேண்டிய  முக்கியமான விழயத்தை வேண்டுமென்றே மறைத்தல் என்பது கூட உடந்தையாயிருந்தல் என்பதே ஆகும்.
உதாரணம்:
"அ" என்பவரை கைது செய்ய  நீதிமன்ற வாரண்ட் பெற்ற "ஆ" என்ற பொது அலுவலரிடம், "இ" என்பவர் வேண்டுமென்றே "ஈ" என்ற அப்பாவியினை "அ" என்று தவறாக அடையாளங்காட்டி கைது செய்ய துண்ட செய்கின்றார்.
இந்த செயலில் "இ" என்பவர் உடந்தை குற்றம் செய்தவராகின்றார்.


Tuesday 5 July 2016

தற்காப்பு உரிமை பற்றி சட்டம் என்ன சொல்கின்றது?

இந்திய தண்டனை சட்ட பிரிவுகள்: 96,97, 98 ஆகியவைகள்,உங்களின் / வேறு எவருடையது உடலை பாதிக்கின்ற வகையில் செய்யப்படும் எந்த ஒரு செயலிலிருந்தும் தற்காத்துக்கொள்ள‌  செய்யப்படும் எந்த ஒரு செயலும் குற்றமல்ல. அதே போல உடமைகளை பாதுகாத்துக்கொள்வதற்கும் இந்த தற்காப்புரிமை செல்லும்.

இந்திய தண்டனை சட்ட பிரிவுகள்: 99 மேற்படி தற்காப்பு உரிமை என்பது ஒரு பொது ஊழியரால் செய்யப்படும் போது தற்காப்புரிமை அளிக்கப்படவில்லை என கூறுகின்றது. ஆனால் அவர் நல்லெண்ணத்தோடு செயல்பட்டிருக்க வேண்டும் என்கின்றது சட்ட பிரிவு.


நான் கூட சில நாட்களுக்கு முன் தற்காப்புரிமை சட்ட விதி 96, 97 னை பொது ஊழியர்களுக்கு எதிராக உபயோகப்படுத்த சட்ட பிரிவு 99 தடையாக உள்ளது என சொல்லியுள்ளேன். ஆனால், சட்ட பிரிவு 99 னை சற்று ஆழ்ந்து நோக்கும் போது, அவ்வாறு செயல்படும் பொது ஊழியர் நல்லெண்ணத்துடன் செயல்படும் என்ற ஒரு வார்த்தை உபயோகிக்கப்பட்டுள்ள்ளதை கவனித்தேன்.  உரிய எச்சரிக்கையும், கவனத்துடன் செயல்படுதலையே நல்லெண்ணம் என கொள்ள இயலும் என‌,  இந்திய தண்டனை சட்ட பிரிவு 52 ன் கீழ் சொல்லப்பட்டுள்ளதால், பொது ஊழியர் சட்டத்திற்கு விரோதமாக, நல்லெண்ணத்துடன் செயல்படாத போது, அவருக்கு எதிராகவும் இந்த தற்காப்புரிமையினை உபயோகப்படுத்தலாம் என அறிய முடிகின்றது

Sunday 3 July 2016

குற்ற செயல்களில் விதி விலக்குகள்.

இந்திய தண்டனை சட்ட பிரிவு 81 - வேறு அதிகப்படியான தீங்கை தடுப்பதற்காக செய்யப்படும் குற்றமுறு உட்கருத்தில்லாமல் செய்யப்படும் செயல் குற்றமல்ல.

உதாரணமாக, ஒரு டிரைவர் தன்னுடைய வண்டியின் கட்டுப்பாடிழந்து, எதிரில் உள்ள வேனின் மீது மோதுவதானால் அந்த காரில், 10 பேர் உயிரிழப்பார்கள் என்பதனை உண்ரும் டிரைவர் அதனை தவிர்க்க அதனருகில் இருக்கும் இரு சக்கர வாகனத்தின் மீது மோதினால் 2 பேர்தான் உயிர்ழப்பார்கள் என்ற நிலையில் தவிர்க்கவே இயலாத நிலையில் அந்த இரு சக்கர வாகனத்தின் மீது மோத செய்வது குற்றமாகாது.
இந்திய தண்டனை சட்ட பிரிவு 82 - ஏழு வயதுக்குட்பட்ட‌ குழந்தையின் செயல் குற்றமல்ல.

இந்திய தண்டனை சட்ட பிரிவு 83. - ஏழு வயதுக்குட்ப‌ட்ட 12 வயதிற்குட்பட்ட தன் நடத்தையின் தன்மை, அதன் விளைவுகளை அறிந்து கொள்ளும் பக்குவமில்லாத குழந்தையின் செயல் குற்றமல்ல.

இந்திய தண்டனை சட்ட பிரிவு 84 - புத்தி சுவாதினமில்லாதரின் செயல் குற்றமல்ல.

இந்திய தண்டனை சட்ட பிரிவு 85 - விருப்பத்திற்கு மாறாக அளிக்கப்பட்ட குடி போதை காரணமாக செய்யப்படும் செயல் குற்றமல்ல.


இந்திய தண்டனை சட்ட பிரிவு 86. விருப்பத்திற்கு மாறாக அளிக்கப்படாத  குடி போதை காரணமாக செய்யப்படும் செயல் குற்றமே.

சற்று கவனிக்கப்பட வேண்டிய இந்திய தண்டனை சட்ட பிரிவு 80

இந்திய தண்டனை சட்ட பிரிவு 80 - சட்டப்பூர்வமான ஒரு செய்கையை செய்கையில் ஏற்படும் தற்செயல் நிகழ்ச்சி குற்றமல்ல.

அதாவது, ஒருவர், கைக்கோடாரியுடன் வேலை செய்கின்றார், திடீரென கோடாரியின் தலைப்பாகம் கழன்று போய் அருகில் நின்று கொண்டிருந்தவரை கொன்று விட்டது என்றால் அது மன்னிக்க முடியாத குற்ற செயல் அல்ல.

ஆனால், இதில் மிக முக்கியமாக நாம் கவனிக்க வேண்டிய ஒரு உட்கருத்து உள்ளது, அது என்னவென்றால்,  இந்த செயல் நிகழ்வதற்கு முன் அது குறித்து எந்த ஒரு எச்சரிக்கையும் அவருக்கு யாராலும் அளிக்கப்படாமலிருக்க வேண்டும். ஒருவேளை அவ்வாறு எச்சரித்த பின்னும், அவர் கோடாரியினை சரி செய்யாமல் வேலை செய்து இந்த மரணம் நிகழ்ந்தால் அது குற்றமாகும்.

இதில் வழக்குறைப்பவரின் வாத திறமை மற்றும் சாட்சிகளை விசாரித்தல் மற்றும் சாட்சியங்களை சேகரித்தல் மூலமே நியாயமும், அநியாயமும் கிடைக்கும்.