Tuesday 5 July 2016

தற்காப்பு உரிமை பற்றி சட்டம் என்ன சொல்கின்றது?

இந்திய தண்டனை சட்ட பிரிவுகள்: 96,97, 98 ஆகியவைகள்,உங்களின் / வேறு எவருடையது உடலை பாதிக்கின்ற வகையில் செய்யப்படும் எந்த ஒரு செயலிலிருந்தும் தற்காத்துக்கொள்ள‌  செய்யப்படும் எந்த ஒரு செயலும் குற்றமல்ல. அதே போல உடமைகளை பாதுகாத்துக்கொள்வதற்கும் இந்த தற்காப்புரிமை செல்லும்.

இந்திய தண்டனை சட்ட பிரிவுகள்: 99 மேற்படி தற்காப்பு உரிமை என்பது ஒரு பொது ஊழியரால் செய்யப்படும் போது தற்காப்புரிமை அளிக்கப்படவில்லை என கூறுகின்றது. ஆனால் அவர் நல்லெண்ணத்தோடு செயல்பட்டிருக்க வேண்டும் என்கின்றது சட்ட பிரிவு.


நான் கூட சில நாட்களுக்கு முன் தற்காப்புரிமை சட்ட விதி 96, 97 னை பொது ஊழியர்களுக்கு எதிராக உபயோகப்படுத்த சட்ட பிரிவு 99 தடையாக உள்ளது என சொல்லியுள்ளேன். ஆனால், சட்ட பிரிவு 99 னை சற்று ஆழ்ந்து நோக்கும் போது, அவ்வாறு செயல்படும் பொது ஊழியர் நல்லெண்ணத்துடன் செயல்படும் என்ற ஒரு வார்த்தை உபயோகிக்கப்பட்டுள்ள்ளதை கவனித்தேன்.  உரிய எச்சரிக்கையும், கவனத்துடன் செயல்படுதலையே நல்லெண்ணம் என கொள்ள இயலும் என‌,  இந்திய தண்டனை சட்ட பிரிவு 52 ன் கீழ் சொல்லப்பட்டுள்ளதால், பொது ஊழியர் சட்டத்திற்கு விரோதமாக, நல்லெண்ணத்துடன் செயல்படாத போது, அவருக்கு எதிராகவும் இந்த தற்காப்புரிமையினை உபயோகப்படுத்தலாம் என அறிய முடிகின்றது

No comments:

Post a Comment