Friday 1 July 2016

நீதிபதிகளின் அதிகாரங்களை அறிவோமா?

நீதிபதிகளின் அதிகாரங்களை அறிவோமா?


மாவட்ட குற்றவியல் நீதிமன்றம்.
இந்நீதிமன்றம் குற்ற விசாரணை முறைச்சட்டம் பிரிவு : 11(3) ன் கீழ் அமைக்கப்பட்டு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ள நீதிமன்றமாகும்.
இவ்வாறு அழைக்கப்படுவது தாலுகா அளவிலுள்ள நீதிமன்றங்களாகும். பொதுவாக "மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதிமன்றம்" குறிப்பிடுவார்கள்.
இந்நீதிமன்ற நீதிபதியினை இரண்டாம் வகுப்பு குற்றவியல் நடுவர் என அழைக்கபடுபவர். இவர் தமக்கு அதிகாரமுள்ள குற்றவியல் & உரிமையியல் வழக்குகளையும் விசாரிக்க முடியும். குற்றம் பற்றிய விசாரணையும் செய்யும் அதிகாரமுள்ளது.
இந்த நடுவருக்கு, குற்றவியலைப்பொருத்த வரை அதிகபட்சம் ஓராண்டு சிறை / ரூ.1000 அபராதம் / இரண்டும் விதிக்கும் அதிகாரம் குற்ற விசாரணை முறைச்சட்டம் பிரிவு : 29(3) கீழ் வழங்கப்பட்டுள்ளது.

நீதித்துறை நடுவர் மன்றம்.

இந்நீதிமன்றம் குற்ற விசாரணை முறைச்சட்டம் பிரிவு : 11(1) ன் கீழ் அமைக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அழைக்கப்படுவதும் தாலுகா அளவிலுள்ள நீதிமன்றமேயாகும். ஆனால், இந்த நீதி மனறத்தில் குற்றவியல் வழக்கு மட்டுமே நடத்தப்படும். இந்நீதிமன்ற நீதிபதியினை இரண்டாம் வகுப்பு குற்றவியல் நடுவர் என அழைக்கபடுவார்.
இவர் தமக்கு அதிகாரமுள்ள இடத்தில் குற்றம் பற்றிய விசாரணையும் செய்யும் அதிகாரமுள்ளது.
இந்த நடுவர், அதிகபட்சம் ஓராண்டு சிறை / ரூ.1000 அபராதம் / இரண்டும் விதிக்கும் அதிகாரம் குற்ற விசாரணை முறைச்சட்டம் பிரிவு : 29(3) கீழ் வழங்கப்பட்டுள்ளது.

2 comments:

  1. இரண்டிற்கும் மேலும் விளக்கமான வித்யாசம் எ.கா உடன் கூற வேண்டுகிறேன்...

    ReplyDelete
  2. 5 tips for live betting in VR with friends - YouTube
    5 tips for live betting in VR youtube downloader with friends · 1. Follow live streamers · 2. Watch live streams of events at top Live Score and Youtube channels · 3. Watch live streams

    ReplyDelete